இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. தென் மண்டலத் தலைவரும், மாநில செயலருமான அகமது நவலி தலைமை வகித்தார். இராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ., கட்சியின் கட்டமைப்பு பலப்படுத்துதல், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளல், அடித்துக் கொல்லப்பட்ட தப்ரேஸ் அன்சாரி (ஜார்கண்ட் வாலிபர்) மற்றும் அவரது குடும்பத்திற்கு நீதி கேட்டு மக்கள் திரள் போராட்டம் நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ ., மேற்கு மாவட்டத் தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் செய்யது இப்ராஹிம் தீர்மானங்கள் வாசித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான அப்பாஸ் நன்றி கூறினார் என மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் எம்.ஹமீது இப்ராஹிம் தெரிவித்தார்.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்


You must be logged in to post a comment.