அரசியல் அதிகாரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும், ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியலாய் அணி திரள்வோம்! அதிகாரத்தை வென்றெடுப்போம்! என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி ஜி கார்னரில் (அக்.21) அன்று நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக காந்தியடிகள் அரங்கில் ‘நெருக்கடிக்குள்ளாகும் மதச்சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவையும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதேபோல் முற்போக்கு பத்திரிக்கையாளர் கெளரிலங்கேஷ் அரங்கத்தில் ‘ஒடுக்கப்பட்ட பெண்களும், அரசியல் எழுச்சியும்’ என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் தந்தை பெரியார் அரங்கில் தொடங்கியது.
மாபெரும் மாநாட்டு பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் அனைவரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது மாநாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் ஒருபகுதியாக மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாநாட்டு சிறப்பு மலரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அப்துல் மஜித் வெளியிட்டார்.
மாநாட்டின் திருச்சி பிரகடனத்தை மாநில பொருளாளர் வி.எம்.அபுதாகிர் வாசித்தார். தொடர்ந்து பின்வரும் 21 மாநாட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
1. விகிதாச்சார பிரதிநிதித்துவ தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும். 2. மின்னணு வாக்குப்பதிவு தேர்தல் முறையை மாற்றி வாக்குச் சீட்டு முறையை கொண்டுவர வேண்டும். 3. தமிழகத்தில் சிறுபான்மையினர் நலத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். 4. மத்திய பாஜக அரசை வீழ்த்த அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும். 5. ஏழு தமிழர்கள் உட்பட முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். 6. விவசாயத்தை முன்னேற்றும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். 7. அழிவுத் திட்டங்களிலிருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும். 8. யு.ஏ.பி.ஏ. சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 9. என்.ஐ.ஏ.வை கலைக்க வேண்டும். 10. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே அமுல்படுத்த வேண்டும். 11. கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்திட வேண்டும். 12. கல்வி மற்றும் தொழில் துவங்க வட்டியில்லா வங்கிக்கடன் வழங்கிட வேண்டும். 13. ஜனநாயக வழியில் போராடும் போராளிகள், சிந்தனையாளர்கள் மீதான அடக்குமுறை கைவிடப்பட வேண்டும். 14. சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்து, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றிடுக: 15. 40 லட்சம் அஸ்ஸாமிகளின் குடியுரிமையை பறிக்கும் தேசிய குடியுரிமை பதிவேட்டை ரத்து செய்ய வேண்டும். 16. சிறுபான்மை முஸ்லிம், கிருத்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் கட்டும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். 17. வக்ஃப் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். 18. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். 19. வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். 20.உருது மொழி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளை அழிவிலிருந்து பாதுக்காத்திட வேண்டும். 21. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரான முத்தலாக் தடை அவசரச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும்.
செய்தி:-ஏ.கே.கரீம் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.பி.ஐ. கட்சி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print




































