மருதநாயகம் (எனும்) கான்சாஹிப் தியாகத்தை நினைவு கூறுவோம்.. மதுரையில SDPI கட்சி ஏற்பாடு..

சுதந்திர போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிர் நீத்த ராஜதந்திரி ராணுவமேதை கான் சாஹிப் எனும் மருதநாயகம். உழைப்பாளர்களும் உற்பத்தியாளர்களும் அரசின் அபிமானக் குழந்தைகள் என்றுரைத்தவர் கான் சாஹிப் பற்றிய   நினைவு கருத்தரங்கம் எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்டம் சார்பில் அக்டோபர் 16 மாலை மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார். எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில பொதுச்செயலாளர்  நிஜாம் முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் காஜா மைதீன், பொருளாளர் கமர்தீன், கான் சாகிப் பள்ளிவாசல் செயலாளர் ராஜா உசேன்,  ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மதுரை மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் ஸஆதி,  மதுரை வக்ஃப் ஃபோர்டு கல்லூரி நிறுவன உறுப்பினர் இம்தியாஸ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மத்திய தொகுதி செயலாளர் அபுதாகீர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். இறுதியாக மதுரை மத்திய தொகுதி தலைவர் ஆரீப்கான் நன்றியுரை நிகழ்த்தினார். வரலாற்றின் முக்கியத்துவம் மருதநாயகம் கான் சாஹிப் கருத்தரங்கை சிறப்பிக்கும் விதமாக பொதுமக்கள் பெண்கள் வரலாற்று ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்..

.செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!