நல்லெண்ண அடிப்படையில் கைதிகளை விடுவிப்பதில் தமிழக அரசு பராபட்சம்: எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இராமநாதபுரத்தில் பகிரங்க குற்றச்சாட்டு..

இராமநாதபுரத்திற்கு SDPI கட்சி தலைவர் முபாரக் இன்று (07/09/2018) வருகை தந்தார்.  இந்த வருகையின் போது முகவை மாவட்டத்தில்   இராமநாதபுரம் கிழக்கு, மேற்கு மாவட்டம் மற்றும் சிவகங்கை மாவட்டம் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சி நிர்வாகிகளை சந்தித்து சிறப்பு உரையாற்றினார்.

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா நெல்லை மாநிலத் தலைவர் முஹமது முபாரக் இராமநாதபுரத்தில் கூறியதாவது: மறைந்த முதல்வர் எம்ஜி..ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுவித்து வருகிறது. இதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வதில் தமிழக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழக மக்களின் ஒட்டு மொத்த ஆதங்கத்தை கனடாவில் பயிலும் கல்லூரி மாணவி சோபியா விமான பயணத்தின் போது பா.ஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரதிபலித்துள்ளார். சோபியா பாஸ்போர்ட் பறிப்பு தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தூத்துக்குடி போலீசார் அவரை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.தமிழிசை சவுந்தரராஜனின் கோபத்தின்  வெளிப்பாடு சோபியா மீதான  நடவடிக்கை 2019 லோக்சபா தேர்தலில் பா ஜ க அரசு மக்கள் கொண்டுள்ள வெறுப்பை பிரதிபலிக்கும் . 

முன்னாள் பிரதமர்  ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் பணி துரிதமாக இருக்க வேண்டும். குட்கா விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி., ஆகியோர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும். இப்பிரச்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையீட்டு இருவரின் பதவியை பறிக்க வேண்டும். பனைக்குளம் பகுதியில் சுற்றுச்சூழல் மாசு, மனிதர்களுக்கு தீங்கு, நீராதாரத்தை பாதிக்கும்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தடை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிடில் எஸ்டிபிஐ கட்சி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் சவுத் கங்கா குடிநீர் நிலையத்தை நிரந்தரமாக மூடுவோம். வைகை ஆற்றின் முகப்பு பகுதியான ஆற்றங்கரை கடலோர பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும். சிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கூறினார்.

இராமநாதபுரத்திலிருந்து மாநில தலைவர் மற்றும் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப், பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், துணை தலைவர்கள் சோமு,சுலைமான் செயலாளர்கள் அப்பாஸ்,ஹமீது இப்ராஹிம், வண்ணை அஸ்கர்,பைரோஸ்கான், பொருளாளர் முஹமது ரபீக் ,ம திருவாடானை, இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி, நகர்,கிளை நிர்வாகிகள் பனைக்குளம் சென்றனர். 

பனைக்குளம் கடற்கரை அருகில் உள்ள தனியார் நிறுவனமான சவுத் கங்கா என்ற நிறுவனத்தை மாநில தலைவர் பார்வையிட்டனர். அந்த நிறுவனம் வெளியேற்றும் ரசாயன கழிவுகளால் நிறுவன அருகில்  குடிதண்ணீராக பயன்படுத்தி வந்த அண்ணாவி ஊரனியை பார்வையிட்டனர். அது தற்போது ரசாயனம் கலந்த உவர் நீராக மாறி உள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணாபுரம் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாகிகள் கருப்பையா ,கணேசன் ஆகியோர் முகமது முபாரக்கை  வரவேற்றனர். இதனை தொடர்ந்து அழகன்குளம் பேருந்து நிறுத்தத்தில் எஸ்டிபிஐ கட்சி மகளிர் அணி மாநில பொருளாளர் உம்முல் தௌலத்யா  வரவேற்றார்.

இதன் பின்பு  ஆற்றங்கரையில் வைகை ஆறும், கடலும் சங்கமிக்கும் இடத்தை பார்வையிட்டனர். ஆற்றங்கரை நகர, கிளை நிர்வாகிகள் வரவேற்றனர். அங்கு, மீனவ சங்க தலைவர் முஹமது அலி ஜின்னா மற்றும் ஆற்றங்கரை மக்கள் ஆறு கடலில் கலக்கும் இடத்தை ஆழப்படுத்தவும், ஆற்றங்கரையை சுற்றுலா தலமாக்கவும் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

இராமநாதபுரம் தாஜ் திருமண மகாலில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் பைரோஸ்கான் வரவேற்றார். இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன், சிவகங்கை மாவட்ட தலைவர் ஹாலித் ஆகியோர் பேசினர். செயல் திட்டங்கள் குறித்து கிழக்கு மாவட்ட பொது செயலர் செய்யது இபுராஹீம், மேற்கு மாவட்ட பொது செயலாளர் பாசறை முகமது இஸ்ஹாக், சிவகங்கை மாவட்ட பொது செயலாளர் சாதிக் ஆகியோர் பேசினர். இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஹமீது இபுராஹீம் நன்றி கூறினார்.

சிவகங்கை, இராமநாதபுரம் மேற்கு,கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் அக்டோபர் 21ல்திருச்சியில் நடைபெறவுள்ள ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கு அனைவரும்  களப்பணியாற்ற வேண்டும் என மாநில தலைவர் முகமது முபாரக் பேசினார்.

இந்த அறிமுக கூட்டத்தில் இராமநாதபுர மாவட்டத்தில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் செயல்வீரர்கள், ஆதரவாளர்கள்  கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!