மண் வளத்தை நாசமாக்கி நீர் ஆதாரங்களை உறிஞ்சும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் மாநில அளவிலான களப் பணியினை கட்சியினர் இன்று 17.03.17 துவங்கியுள்ளனர்.


இந்நிலையில் இன்று SDPI கட்சியின் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு கலை கல்லூரி அருகே தந்தரேந்தல் கிராமத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை கட்சியின் மாநில செயலாளரும், சுற்று சூழல் பிரிவு மாநில பொறுப்பாளருமான டி. ரத்தினம் கலந்து கொண்டு கருவேல மரங்களை வெட்டி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார். STDU தொழிற்சங்க மாநில பொருளாளர் கார்மேகம் முன்னிலை வகித்தார்.


இராமநாதபுரம் மாவட்ட தலைவர் MS முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் தலைமையில் துவங்கிய இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகி அப்பாஸ் ஆலிம், கீழக்கரை நகர் நிர்வாகி குத்பு ஜமான், அஜ்மல் செரீப், வஹாப், ஹசன் அலி, சித்தீக், பைரோஸ், சேகு இபுறாகீம், காதர், ஹாஜா அலாவுதீன், ராஷிது உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து கருவேல மரங்களை அகற்றினர்.



Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









