கீழக்கரையில் ஈகைத் திருநாளை முன்னிட்டு Kilakarai Nagar Sdpi கட்சியின் நகர நிர்வாகிகள், மேற்கு மற்றும் கிழக்கு கிளையின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் கலந்துகொண்ட ரமலான் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நகர் தலைவர் அஷ்ரப் அவர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சமூக நல்லிணக்க அடிப்படையில் Kilakarai நகர் sdpi கட்சி சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஈகை திருநாள் சந்திப்பையொட்ணி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு நகர் தலைவர் அஷ்ரப் இனிப்பு வழங்கினார். அதே போல் பீஸ்ஸா பேக்கரி உரிமையாளர் சீனிவாசனுக்கு நகர் துணை தலைவர் ஹாஜா அலாவுதீன் இனிப்பு வழங்கினார். காவல் துறை துணை ஆய்வாளர். செந்தில்முருகனுக்கு நகர் துணை தலைவர் நூருல்ஜமான் இனிப்பு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சாக மகளிர் காவல் நிலையம் தலைமை காவலார் ஹெலனுக்கு நகர் செயற்குழு உறுப்பினர் செய்யத் இனிப்பு வழங்கினார். காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு தொகுதி துணை தலைவர் சித்திக் அவர்கள் இனிப்பு வழங்கினார். தி மு க நகர உறுப்பினர் கஜேந்திரனுக்கு நகர் பொருளாளர் சாதிக் அவர்கள் இனிப்பு வழங்கினார். தி மு க நகர அவைத்தலைவர் மணிகண்டனுக்கு நகர் செயற்குழு உறுப்பினர் முருஸ்ஸலின் இனிப்பு வழங்கினார்.
அதே போல் அப்பா மெடிக்கல் சுந்தருக்கு நகர் செயலாளர் காதர் இனிப்பு வழங்கினார். அ ம மு க நகர் செயலாளர் சுரேஷுக்கு தொகுதி துணை தலைவர் சித்திக் இனிப்பு வழங்கினார். நாம் தமிழர் கட்சியின் நகர தலைவர் பிரபாகரனுக்கு நகர் செயற்குழு உறுப்பினர் செய்யத் அவர்கள் இனிப்பு வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் அற்புதக்குமாருக்கு நகர் செயற்குழு உறுப்பினர் #பகுருதீன் அவர்கள் இனிப்பு வழங்கினார்கள்.
இது போன்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகளின் மாற்றுமத சகோதரர்களை சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது, சகோதரத்துவத்தை வளர்ப்பதுடன், இஸ்லாம் மார்க்கத்தை அவர்களுக்கு அழகிய முறையில் எத்தி வைப்பதற்கும் வாய்ப்பாக உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print




















