கீழக்கரையில் இன்று காலை 10 மணியளவில் நகராட்சி ஆணையர். வசந்தி மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர்கள் வசந்த் மற்றும் பூ முத்து ஆகியோர் தலைமையிலும், கீழக்கரை நகராட்சி ஆய்வாளர் தின்னாயிர மூர்த்தி மற்றும் ஜும்மாபள்ளி ஜமாத் பொருளார் முகம்மது சதக் தம்பி, கிழக்கு தெரு துணை பொருளாளர் அஜிஹர் முன்னிலையில் SDPI சார்பாக டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிலவேம்பு கசாயம், விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் அடங்கிய பிரசுரங்கள் விநியோகத்தை பிரத்யேக கொசு உடை அணிந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.
மேலும் இன் நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் முக்கியஸ்தர்கள், மற்றும் கீழக்கரை நகர் SDPI கட்சியின் நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் POPULAR FRONT நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













