ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்த அம்மாநில அரசின் உத்தரவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.1908ல் கிரிமினல் சட்ட திருத்தம் 16-வது பிரிவின் படி ஜார்கண்டில் ஆளும் பா.ஜ.க அரசு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்து உத்தவிட்டது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் அந்த தடையை ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் மீது பதிவுச் செய்த முதல் தகவல் அறிக்கையையும்(எஃப்.ஐ.ஆர்) உயர்நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட சட்டத்தின்படி ஒரு இயக்கத்தை தடைச் செய்வதற்கான நடைமுறைகள் எதனையும் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை என்றும் இவ்விவகாரத்தில் இயல்பான நீதியின் தத்துவங்களும், அரசியல் சாசனத்தின் 19-வது பிரிவும் மீறப்பட்டுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
தடையை நியாயப்படுத்தும் எந்தவொரு ஆவணத்தையும் ஆஜர்படுத்த மாநில அரசால் இயலவில்லை என்றும் உயர்நீதிமன்றம் கூறியது. தடை உத்தரவு என்பது அநீதியானது.அதனால் தடை உத்தரவை ரத்துச் செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
ஜார்கண்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடைச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மீதான தடை நீக்கத்தை வரவேற்பதாக சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி மற்றும் கீழக்கரை பாப்புலர் ஃபிரண்ட் கிளைத்தலைவர் முஃபீஸ்,SDPI கிளைத்தலைவர் அஸ்ரப் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
நன்றி : தேஜஸ் மலையாள நாளிதழ்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









