SDPI கட்சி சார்பாக ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை நடைப்பயணம் நடைபெற்றது

விவசாயிகள் நலன்கருதி ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி R.S மங்கலம் கண்மாயிலிருந்து தாலுகா அலுவலகம் வரை நடைப்பயணம் நடைபெற்றது.

கோரிக்கைகள்,தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய கண்மாய்யான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை மீட்டெடுக்க வேண்டும்.,வைகை நீரை ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்., ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயில் இருந்து தண்ணீர் செல்லும் 72 சிறுகண்மாயிக்கான பாசனக்கால்வாய்களை சரி செய்ய வேண்டும்., கொரானாவால் பாதிக்கப்பட்ட நெல் விற்பனையை சரி செய்ய அரசு நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்., உரத்தட்டுப்பாட்டை நீக்கி உர விநியோகத்தை சரி செய்ய வேண்டும் .இக்கோரிக்கைகளை முன்வைத்து இக்கோரிக்கை நடைப்பயணத்தை SDPI கட்சி திருவாடானை தொகுதி இணைச்செயலாளர் ரிஸ்வான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்.SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்ட தலைவர் M.I நூர் ஜியாவுதீன் ,மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ் ,மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் அவர்கள், திருவாடானை தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத்,தொகுதி செயலாளர் ஹனீப்  முன்னிலை வகித்தனர்.SDPI இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் ஜமீல் அவர்கள் ,கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த விவசாய சங்கத்தலைவர் தோழர் முருகேசன் அவர்கள், திமுக விவசாய அணி மாநில துணைச்செயலாளர் நல்ல சேதுபதி அவர்கள் ,இராமநாதபுரம் அமமுக மாவட்ட பொதுச்செயலாளர் வா.துந ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், மேலும் திருமதி ராதிகா பிரபு ஆர்.எஸ்.மங்கலம் chairman கலந்து கொண்டனர்.இறுதியாக வட்டாட்சியர் அலுவலர் அவர்களிடம் கோரிக்கை மனுவை கொடுக்கப்பட்டது,வட்டாட்சியர் அவர்களும் கோரிக்கை மனுவை படித்து பார்த்துவிட்டு உங்கள் கோரிக்கைகளை கூடிய விரைவில் பரிசீலனை செய்து நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று சொன்னார்கள். இக்கோரிக்கை நடைப்பயணத்தில் 150ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டன

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!