மத்திய அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து தேவகோட்டையில் எஸ் டி பி ஐ கட்சியின் சார்பாக வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் காந்தி ரோடு பகுதியில் நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அச. உமர் பாரூக், புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் எஸ்.முகமது அனஸ் சிறப்பு உரையாற்றினார்கள். மாவட்ட தலைவர் டாக்டர் அப்துல் கலாம், மாவட்ட பொதுச் செயலாளர் இன்ஜினியர் அகமது அலி, மாவட்டச் செயலாளர் அப்துல் சாதிக் அலி, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன் , மாவட்டத் துணைத் தலைவர் சாதிக் பாட்ஷா,மாவட்ட பொருளாளர் அசாருதீன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் ஜே யாசின் , மற்றும் தொகுதி நகர நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.