செப்., 6 ல் கீழக்கரையில் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி நிகழ்ச்சி…

மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் படைப்புகளை உலகறிய செய்யவும், எதிர்கால விஞ்ஞானிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தும் ஓர் உன்னத முயற்சியாக புதிய தலைமுறையின் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி – 2018 நிகழ்ச்சி. இது கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி சதக் நகரில் 06.09 2018 காலை 10 மணிக்கு நடக்க உள்ளது.

இக்கண்காட்சியை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைக்கிறார். சென்னை முகமது சதக் அறக்கட்டளை சேர்மன்  எஸ்.எம்.முஹமது யூசுப் சாகிப், சென்னை முகமது சதக் அறக்கட்டளை செயலாளர் ஹாஜியானி எச்.ஷர்மிளா, கீழக்கரை முஹமது சதக் பொறியியல் கல்லூரி டீன் முனைவர் ஜெ. முஹமது ஜகாபர், புதிய தலைமுறை முதுநிலை மேலாளர் டி.ராஜா ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மாலை 4மணிக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

கீழக்கரை சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. அப்பாஸ் மைதீன் வரவேற்கிறார். முதன்மை கல்வி அலுவலர் ஆர். முருகன் தலைமை விருந்தினராக பங்கேற்று பரிசு வழங்க உள்ளார். புதிய தலைமுறை வர்த்தக மேம்பாடு அலுவலர் என்.மணிகண்டன் நன்றி கூறுகிறார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!