அறிவியல் உலகை பள்ளி வளாகத்திற்குள் கொண்டு வந்த அல்பய்யினா பள்ளி..

அல்பய்யினா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு PLANETARIUM என்கிற விண்வெளியை நேரில் பார்ப்பது போன்று சிறிய திரையரங்கு உருவாக்கப்பட்டு அதன் மூலமாக விண்வெளி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விண்வெளி பற்றிய அறிவியல் ரீதியான முழுமையான தகவல்களை மாணவ, மாணவிகளுக்கு  புதிய முயற்சியாக ஒலி, ஒளியுடன் உட்காட்சி வடிவத்தில் காண்பிக்கப்பட்டது. இதன் மூலம்  பள்ளி விண்வெளி பாடத்திட்டங்களை காட்சி ஊடகத்தின் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்காக ஹைதராபாத்திலிருந்து  வருகை புரிந்து மாணவ, மாணவிகளுக்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். இது பற்றி பள்ளி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,  “வரக்கூடிய காலங்களில் மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவியல் ரீதியான தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக வழங்க உள்ளோம். இது போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக மாணவ, மாணவிகள் தங்களுடைய அறிவு திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்”, என கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!