ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து உலக மண்வள தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு மண்வளம் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மண் வளத்தை பேணிக்காத்தல் குறித்து மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பரமக்குடி நடமாடும் மண் பரிசோதனை நிலையம் வேளாண் அலுவலர்கள் , ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் , திருப்புல்லாணி தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மண்வளம் பேணி காக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

You must be logged in to post a comment.