உலக கல்விக்காக ஹைதரத்துல் ஜலாலியா பள்ளி மாணவர்களின் உள்ளூர் களப்பணி…

பள்ளயில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பறை படிப்பும், ஏட்டு படிப்பு மட்டும் வாழ்க்கைக்கு உதவாது. அதே சமயம் உலக கல்வியும் வாழ்கையில் உயர்வதற்கு மிகவும் அவசியமாகும்.

அதை அடிப்படையாக இன்று (24-08-2017) கீழக்கரை கிழக்குத் தெரு ஹைரத்துல் ஜலாலியா தொடக்கப் பள்ளியில் 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவியரை களப் பணியாக, ஆசிரியர்கள் வெளியில் அழைத்து சென்றனர்.

இந்த உள்ளூர் களப்பணியில் மாணவர்கள் கடற்கரை, மற்றும் கலங்கரை விளக்கம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர் மிகவும். உற்சாகத்துடனும், சந்தோசமாகவும் பங்கேற்றனர்.


Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!