2017-2018ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான ஜூலை 2017 மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், நீச்சல் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளான கால்பந்து, இறகுப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இராமநாதபுரம் மாவட்ட பிரிவின் சார்பில் 21.07.2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

100மீ, 400மீ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளும் 100 மீ, 200மீ, 400 மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய தடகள போட்டிகளும் வீரர் வீராங்கணைகளுக்கு நடைபெறவுள்ளது. குழுப்போட்டிகளான கால்பந்து (Football), இறகுப்பந்து(Badminton) ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
50மீட்டர், 100மீட்டர், 200மீட்டர், 400மீட்டர் freestyle 50மீட்டர் backstroke, 50மீட்டர் butterfly stroke, 200 மீட்டர் individual medley ஆகிய நீச்சல் போட்டிகளும் வீரர் வீராங்கணைகளுக்கு நடைபெறவுள்ளது.

போட்டியில் பங்கு கொள்ள வரும் வீரர்கள், வீராங்கணைகள் தங்கள் சொந்த செலவில் வருதல் வேண்டும். அதற்கான பயணப்படி, தினப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது. இப்போட்டிகளில் பள்ளி மாணவ மாணவர்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள வரும் வீரர்கள், வீராங்கணைகள் விளையாட்டுச் சீருடையில் வருதல் வேண்டும். வீரர்கள், வீராங்கணைகள் இருபாலருக்கும் போட்டிகள் தனித்தனியாக போட்டிகள் நடைபெறவுள்ளது.

தடகளம் மற்றும் நீச்சல் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவர்களுக்கு சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்படும். குழுப் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பெறுபவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். ஒரு தனிநபர் இரண்டு போட்டிகளில் (Event)) மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










நாளை நடக்கப்போகும் போட்டிகளுக்கு இப்பொழுது சொல்லி எந்த பயனும் இல்லை. ஆசிரியரே. கொஞசம் முன்கூட்டியே சொல்லி இருந்தால் பயனுள்ளதாக இருந்து இருக்கும்.
மேலும் உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்.