சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முகமதியா மேல்நிலைப்பள்ளி சித்தார்கோட்டை இணைந்து தடகள போட்டி..

இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை முகமதியா மேல்நிலைப்பள்ளி சித்தார்கோட்டை இணைந்து ராமநாதபுரம் குறுவட்ட அளவிலான 2018 2019 தடகளப் போட்டிகளை நடத்தினர். இப்போட்டியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டு கால்பந்து, கபடி, கொக்கோ, பாட்மிட்டன், டேபிள் டென்னிஸ், கேரம், வாலிபால், கூடைப்பந்து, உயரம் தாண்டுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 14 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.  போட்டிகளில் ஆல்வின் மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஏவி எம் எஸ் பள்ளி, கிரசன்ட் பள்ளி, கொழும்பு ஆலிம் பள்ளி, டி டி விநாயகர் பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தேவிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆர் காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தொருவளுர் பள்ளி என 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாவட்ட கல்வி அலுவலர் பிரேம், மாவட்ட ஆய்வாளர் உடற்கல்வி துறை வசந்த், முகமதியா உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜவஹர் அலி, முகமதியா மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு, ஷாஜகான், சலீம் விண்ணரசி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!