மண்டபம் காந்தி நகர் ஊராட்சி நடுநிலைப் பள்ளி புனரமைப்பு பணியில் கைகோர்த்த “கீழை நியூஸ்” நிர்வாகம்…

மண்டபம் காந்தி நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மிகவும் பழமையான மற்றும் பல கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூக ஆர்வலர்கள், தலை சிறந்த அரசியல்வாதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல சிறந்த தலைமுறைகளை உருவாக்கிய வரலாறு கொண்டது.

இப்பள்ளியில் ஏழ்மை நிலை முதல் நடுத்தர வர்க்கம் வரை பல தரப்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியில் தரமான கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் இருந்தும், சூழலையும், படிக்கும் இடத்தையும் அழகுற வைக்க இயலாத நிலையில் பள்ளி நிர்வாகம் இருந்து வந்தது. இந்நிலையில் பள்ளியை புதிய வண்ணம் பூசி பள்ளியின் தரத்தை மேம்படுத்த அரசு உதவியை மட்டும் வைத்து செய்ய முடியாது என்ற நிலையில், பள்ளி மீது அக்கறை கொண்ட வில் மெடல் நிர்வாக இயக்குனர் மற்றும் இன்னும் பலர் நிதி சோ்த்து பள்ளிக்கு உதவ முன் வந்தனர்.

இது சம்பந்தமாக கீழை நியூஸ் நிர்வாகத்திற்கு விபரம் கிடைத்த பொழுது அப்பள்ளியின் பெருவாரியான பகுதிக்கு வண்ணம் பூசும் செலவை கீழை நியூஸ் நிர்வாகம் ஏற்று அனைத்து பொருளாதார உதவியும் செய்தது. இன்று அப்பள்ளி புதிய பொலிவுடன் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு செல்லும் வகையில் மிளிர்ந்து நிற்கிறது. இத்தருணத்தில் நிலையான தர்மமான கல்விக்கு உதவி செய்ய வாய்ப்பளித்த பள்ளி நிர்வாகம் மற்றும் அதற்கு உதவியாக இருந்த வில் மெடல்ஸ் நிர்வாகத்திற்கும் மனமார நன்றியை கீழை நியூஸ் நிர்வாக தொிவித்துக் காெள்ள கடைமைப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!