நெல்லை மாவட்டம் இடைகாலில் பள்ளி மாணவ மாணவியருக்கான பண்பாட்டு போட்டி…

நெல்லை மாவட்டம் இடைகால் இந்து மறவர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கானபண்பாட்டு போட்டி 29/10/18 அன்று நடைபெற்றது.

இப்போட்டியில் அருகிலுள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இடைகால் அருகிலுள்ள கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் மாணவ மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வென்றனர்.

கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் விவேகானந்தர் மன்றம் சார்பில் போட்டியில் பங்கு பெற்ற F.அபிஷா, V.வின்சிகா, V.ரித்திஷ், ஆகியோர் முதல் பரிசுகளை வென்றனர். பாட்டுப்போட்டியில் பங்கு பெற்ற மாணவி M.S. ஜென்சி மூன்றாம் பரிசை வென்றுள்ளார்.

இவ்விழாவில் கோவிலாண்டனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை P.உஷாராணி, ஆசிரியை செல்விசுதா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை சிறந்த முறையில் பயிற்றுவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!