பள்ளி மாணாக்கர் குழுவினருக்கு பேட்ஜ். கலெக்டர் அணிவிப்பு..

இராமநாதபுரம், நவ.22 – இராமநாதபுரம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவியர் அணிக்கு பேட்ஜ் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குழு தலைவர்களுக்கு  கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேட்ஜ் அணிவித்தார். அவர் பேசுகையில், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறன், இணைத்திறன் மேம்பட அணி துவங்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் மாணாக்கரிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், ஒவ்வொருவருடைய மேம்பாட்டுத்திறன் சிறந்து விளங்கி வருவதை எளிதாக உணர முடிகிறது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இத்திட்டத்தை துவங்கி மாணாக்கரிடையே கல்வி சார்ந்த திறனை மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் மாணாக்கர் குழு மனப்பான்மையுடன் கல்வி மட்டுமின்றி கல்வி இணை செயல்பாடுகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் பங்கு பெற்று சிறப்புடன் செயல்பட்டு தாங்கள் சார்ந்த அணி வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், CHILD ஒருங்கிணைப்பு குழுவினர் வான்தமிழ் இளம்பரிதி, விஜயராம், சாகுல் மீரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!