கடந்த சில வாரங்களாக சில தின பத்திரிக்கை மற்றும் இணைய பத்திரிக்கையில் 89 வருடங்களாக நடந்து வரும் பள்ளிக்கூடத்தை பற்றிய செய்திகள் இட ஆக்கிரமிப்பு, மாணவர்களுக்கு ஆபத்து என்று பயமுறுத்தும் செய்திகள் வெளிவந்து, பல பொதுதளங்களிலும் பரவி வந்தது. ஆனால் இச்சம்பவத்தின் உண்மை நிலை அறிய “சமூக நலன் விசாரனை” பத்திரிக்கை குழு விசாரித்த பொழுது, வெளிவந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அறிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக பள்ளியின் தாளாளரை சந்தித்து விளக்கம் கேட்ட பொழுது அவர்,” இந்த செய்தி தொடர்பாக பள்ளியின் தாளாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது எங்களுடைய பள்ளி அரசு விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வண்ணம் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கையையும் சுயநலத்திற்காக செய்தி வெளியிட்ட நிருபரை வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறினார். மேலும் குறிப்பிட்ட பத்திரிக்கை நிருபரின் தனிப்பட்ட பிரச்சினையின் அடிப்படையிலேயே அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது” என்றார் .
பலரும் நன்கு அறிந்த பள்ளி மீதே இவ்வளவு அவதூறுகளை பரப்புகிறார் என்றால் இவரால் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்ல முடியாத நபர்கள் எத்தனை பேர் என்பது அறியாத விசயம்தான்.” என்று கூறி முடித்தார்.
மேலும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ள முதுகுளத்தூர் – பள்ளிவாசல் மேல்நிலை பள்ளி 89 வருடங்களாக சாதி மதம் பாகுபாடுயின்றி மத நல்லிணக்கத்தோடு அனைத்து சமுதாய மக்களும் படித்து வருகின்றனர்/ பயற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இந்த வருடம் கூட நல்ல பதிப்பெண் தேர்ச்சி பெற்று மாணவ மாணவிகள் வெளியேறினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் அதில் படித்த மாணவ மாணவிகள் பட்டதாரிகளாக பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள் என்ற பெருமையும் அந்த பள்ளிக்கு உள்ளது.
அனைத்துக்கும் மேலாக முதுகுளத்தூர் – கடைவீதியில் நல்ல கட்டமைப்போடு அனைத்து வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான முறையில் அமைந்துள்ளது என்பதை முதுகுளத்தூர் – காவல்துறை, கல்வித்துறை, மாவட்ட ஆட்சியர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அறிந்த ஒன்று.
ஆனால் அது போன்ற செய்திகளால் முதுகெலும்பு பத்திரிக்கை / ஊடகம் என்பார்கள், ( இது போன்றவர்களால் ஒற்றுமொத்த பத்திரிகை / ஊடக சார்ந்த அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்துகிறது ). மக்கள் மத்தியில் ஊடகம் / பத்திரிகை மீது உள்ள நம்பிக்கையும் இழக்க நேரிடுகிறது.
இதன் உண்மை தன்மை அறிய உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறோம். சிந்திப்பீராக..
நன்றி:- சமூகபுலன் விசாரணை செய்திக்குழு.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










