தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் தாலுகா, புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர், இந்த பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ளது.
பள்ளி கட்டிடத்தின் மோசமான நிலை, மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் படு மோசமாக அபாயகரமான நிலையில் உள்ளதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில் மாணவியருக்கான இருக்கை வசதிகள், கணினிகள்,கழிவறை வசதி, போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தால் மாணவ மாணவியர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது.
அது மட்டுமின்றி கட்டிடம் வெகு ஆண்டுகளாக சீரமைக்க படாத காரணத்தினால் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் மிகுந்த அச்சம் காரணமாக மாணவர்களை பள்ளியில் சேர்க்க தயங்குவதாக தெரிவித்தனர். இது தொடர்பாக கடந்த 21.02.2019 அன்று பொது மக்கள் சார்பில் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர் , ஆனால் இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
ஏதேனும் விபத்து ஏற்படுவகற்கு முன்னர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என புத்தன்தருவை ஊராட்சி ஒன்றிய மக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்,











You must be logged in to post a comment.