தமிழ் பள்ளிக்கல்வித்துறையை மதிக்காமல் பள்ளி விடுமுறையில் பள்ளி நடத்திய காமலாபுரம் தனியார் பள்ளி..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள காமலாபுரம் இங்கு அரசு உதவிபெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர் நிலக்கோட்டை, கொடையரோடு, செம்பட்டி, சின்னாளபட்டி காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மாணவிகள் கல்வி கற்க இந்த பள்ளிக்கு வருகின்றனர் இப்பள்ளி மதுரை செம்பட்டி சாலையில் அமைந்துள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் விதமாக கடந்த 14 15 16 17 ஆம் தேதி வரை தமிழக அரசால் அனைத்து பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கிராமப்புறங்கள் அதிகம் சூழ்ந்த நிலக்கோட்டை தாலுகாவில் அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இயற்கையையும் சார்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை பண்டிகைக்கு தமிழக தமிழர்கள் வாழ்கிறார்களோ வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட தமிழகத்திற்கு வந்து இப்பண்டிகையை தங்களது சொந்த மண்ணில் குடும்பத்துடன் கொண்டாடி வருவது வழக்கம். இந்நிலையில் மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகிய இரு தினங்களாக காமலாபுரம் தனியார் பள்ளியில் தமிழக அரசு விடுமுறை அறிவித்த பிறகும் 16ஆம் தேதி இன்று 17ஆம் தேதி இரண்டு நாட்களாக தொடர்ந்து பள்ளி நடைபெற்று வருகிறது

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நடைபெற்றுவரும் தமிழக அரசையும் தமிழர் கலாச்சாரத்தையும் கிராமப்புற மக்களை புண்படுத்தும் வகையில் மாணவர்களுக்காக விடப்பட்ட விடுமுறையில் கூட மாணவர்களுக்கு விடுமுறை விடாமல் விடுமுறை அன்று பள்ளியை நடத்தி வருவது பொதுமக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

கிராமப்புற மாணவர்கள் தங்களது வீடுகளிலும் மற்றும் விவசாய நிலத்திலும் கிராமங்களில் விளையாட்டுப் போட்டிகள் என குடும்பத்துடன் அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து நமது கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் நோக்குடன் நடத்தப்படும் பொங்கல் வைத்து மகிழும் இந்நாளில் மாணவர்களுக்கு பள்ளி என்பது மிகவும் கேலிக்கூத்தாகும்

தமிழக பள்ளிக்கல்வித் துறையை அவமதிக்கும் விஷயமாகவும் தமிழர் திருநாளை புறக்கணிக்கும் நிலையாகவும் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்..

செய்தி:- ராஜா, நிலக்கோட்டை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!