மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ளது அரசு மேல்நிலைப்பள்ளி மைதானம்.இந்த அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தினந்தோறும் காலையில் பெண்கள் ஆண்கள் நடை பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.மேலும் இளைஞர்கள் சிறுவர்கள் பல்வேறு விளையாட்டுப்பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் செடி கொடிகள் மற்றும் பாதைகளில் மழைநீர் தேங்கியும் உடற்பயிற்சி செய்ய வரும் பொது மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது.
அதிகாலையில்; உடற்பயிற்சி செய்ய வரும் பொது மக்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கும் இடையூறாக இருப்பதாகவும் புகாரின் பேரில் இன்று வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும் ,திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான இளமகிழன் தலைமையில் ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம் மணல்களை கொண்டு விளையாட்டு மைதானம் மற்றும் அதன் பாதைகளை பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.விளையாடட்டு மைதானத்தின் அவலநிலை குறித்து மறைந்த முன்னாள் ஒன்றிய செயலாளர் சுதந்திரம் அடிக்கடி தம்மிடம் தெரிவித்து வேதனைப்பட்டதாகவும் அவர் நினைவாக அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தையும் அதன் பாதையையும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டதாக இளமகிழன் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.