தேவிபட்டினம் இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழர் கலாச்சார கண்காட்சி ..

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் தமிழர் கலாச்சார கண்காட்சி 2019 நடைபெற்றது. பள்ளி நிறுவனர் மாதவனூர் எம். கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியரால் உருவாக்கப்பட்ட சேர, சோழ, பாண்டிய வரலாறு தமிழர் பண்பாடு முத்தமிழ், லெமூரியா கண்டம், கண்ணகி வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கடை ஏழு வள்ளல்கள், தனுஷ்கோடி கலாமின் கனவுகள் உள்ளிட்ட தலைப்புகளில் கண்காட்சி நிகழ்வுகள் நடைபெற்றன.

மாணவர்கள் உருவாக்சிய குறும்படம் திரையிடப்பட்டது. தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவலதா, இயக்குநர் முனியசாமி, நிர்வாக இயக்குநர் சதிஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் முத்துக்குமார் கண்காட்சியை ஒருங்கிணைத்தார்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!