டாக்டர் இளையராஜா நர்சரி& பிரைமரி பள்ளி மழலையருக்கு பட்டமளிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் டாக்டர் இளையராஜா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி முதலாம் ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. டாக்டர் கே.இளையராஜா தலைமை வகித்தார். டாக்டர் கே. இளையராஜா எஜூகேஷன் மற்றும் ஹெல்த் சர்வீஸ் டிரஸ்ட் அறங்காவலர் டாக்டர் ஆர்.சகானா குத்துவிளக்கு ஏற்றினார். கோவை வருமான வரி துறை உதவி இயக்குநர் முனைவர் என்.கார்த்திக் மழலையர் 30 பேருக்கு பட்டம் வழங்கினார். படிப்பில் சிறந்த குழந்தைகள், பல்வேறு போட்டிகளில் வென்ற குழந்தைகளுக்கு டாக்டர் கே.இளையராஜா பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

இராமநாதபுரம் சார் பதிவாளர் எஸ். கோபி தாஸ், மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி கூட விஞ்ஞானி கே.ஈஸ்வரன், டாக்டர் இளையராஜா குழும நிறுவனங்களின் செயலாளர் டி. மணிகண்ட ராஜா, பிரிட்டிஷ் கவுன்சில் பள்ளி தூதுவர் எம்.ஐயப்ப ராஜ் , டாக்டர் இளையராஜா குழும நிறுவனங்களின் ஆலோசகர் பி.விஜயலட்சுமி, முதல்வர் எம்.ஷைலஜா ஆனந்தி ஆகியோர் பேசினர். மழலையரின் கண் கவர் கலை நிதழ்ச்சி நடந்தது. விழரவில் மழலையர் மற்றும் அவர்களின் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!