இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழாவினை முன்னிட்டு இராஜசிங்கமங்கலம் வட்டாரத்தில் உள்ள மாணவ மாணவிகளின் திறமையினை ஊக்குவிக்கும் வகையில் கலைத்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறப்பாக இன்று 22.04.2019 நடைபெற்றது .
கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, விளையாட்டு போட்டிகள் அனைத்திலும் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினார்கள்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பொன்னையா தலைமை தாங்கி சிறப்பித்தார். பள்ளியின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் அனைவரும் மிக சிறப்பாக செயல்படுவதாக கூறினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கணிணி ஆசிரியர் இராமக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் குமரன் கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைத்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் சதக்கத்துல்லா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி தலைவர் சசிக்குமார் எடுத்துக்கூறினார். கந்தசாமி கலந்து கொண்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தினார்.
கோடை இடி கேசர் கான் அவர்கள் கலந்து கொண்டு அரசுப்பள்ளியின் வலிமையை உணர்த்தி மாணவர்களுக்கு உற்சாகமூட்டினார். கலைத்திறன் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த அழகிய நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு பொண்ணாடை வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது . இந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் பொது தேர்வில் நூறு சதவீதம் வெற்றி பெற்றமைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் பகுர்தீன், நிர்வாக குழு உறுப்பினர் தாஜ்மஹால் அஜ்மீர், ஆசிரியை ஜோதி, ஆசிரியர் பாதுஷா, பிரிட்டோ பள்ளியின் தாளாளர் கமருதீன், தீபம் இந்தியா அறக்கட்டளை தலைவர் மதிவாணன், மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் முன்னாள் மாணவர்கள் அமீன், நிசார், சாகுல் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முடிவில் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி நன்றியுரை கூறினார்.
இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வளர்ச்சிக்காக பள்ளி முழுவதும் வர்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் வசதிக்காக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு காற்றோட்டமாக கல்வி பயில ஏற்பாடு செய்ய முயற்சி செய்து வருகிறோம்.
இராஜசிங்கமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இந்த ஊரின் அடையாளமாக திகழ்கிறது . இந்த பள்ளியின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பணி தொடரும் என்ற நம்பிக்கை மாணவர்களிடம் விதைக்கப்பட்டது.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















