எமனேஸ்வரம் தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா, மாணவர் சேர்க்கை விழா…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் உள்ள பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா, மற்றும் முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. எமனேஸ்வரம் மக்கள், பள்ளிக்கு தேவையான மேஜை,

நாற்காலி, மின் விசிறி, கல்வி உபகரண பொருட்கள், மற்றும் பள்ளிக்கு தேவையான பல்வேறு பொருட்களை எமனேஸ்வரம் பேருந்து நிறுத்ததில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று பள்ளியில் ஒப்படைத்தனர்.

கல்விச் சீர் கொண்டு வந்தவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி ஆரத்தி எடுத்து வரவேற்றார். இதனையடுத்து முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பள்ளியில் சேர்ந்த குழந்தைகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஆசிரியர் பயிற்றுநர், நித்யா, ஆசிரியர்கள் வளன்மேரி, தாழையம்மாள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் விஜயராகவன், சாந்தி, குர்ஷித் பானு, நஜிமு நிஷா, லதா, சுமித்ரா, கயல்விழி, முருகேசன், புவனேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!