முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளியில் “நல்ல சமூகம்” என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள் 08.03.2019 அன்று மதியம் 2.30 மணி அளவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சினை 6 ஆம் வகுப்பு மாணவன் முகமது ஹர்சத் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து 6 ஆம் வகுப்பு மாணவன் ஆதிப் அலி மற்றும் ஆசிரியை ஏ. மதுபாலா வரவேற்புரை வழங்கினார்கனார்கள். பள்ளி முதல்வர் ஆலியா, சிறப்பு விருந்தினர்களான இந்தியன் ரெட்கிராஸ் செயலாளர் ராக்லண்ட் மதுரம், இராமநாதபுரம் மாவட்ட சதுரங்க சங்க துணை முதல்வர் சுஸ்ரிதா, இந்தியன் ரெட் கிராஸ் உறுப்பினர் ஆ.உலக ராஜ் ஆகியோருக்கு நினைவு பரிசை வழங்கினார்.
பல விதமான கலைநிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்கள் நல்ல சமூகம் எப்படி இருக்க வேணடும் என்பதை பற்றியும், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணங்களை பற்றியும் விளக்கினார்கள். சிறப்பு விருந்தினர்கள் மூவரும் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளையும் அவர்களின் திறமைகளையும் வெகுவாக பாரட்டினார்கள். எப்பொழுதும் உண்மையை பேசுவதன் மூலம் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும் என்றும், ஆரோக்கியமான உணவை உண்டு தன் ஆரோக்கியத்தை பேணிக்காக்கவும் அறிவுறுத்தினார்கள். இறுதியாக 5 ஆம் வகுப்பு மாணவி புதைனா நன்றி உரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
































You must be logged in to post a comment.