பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்!- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் குறித்த அறிவிப்பை ஒருநாள் முன்னதாகவே ஆட்சியர்கள் அறிவிக்க வேண்டும்!- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்..

மேலும், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளையும் 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறையை மாவட்ட ஆட்சியர்களே வெளியிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒருநாள் முன்னதாகவே அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இணையவழி வகுப்புகளை பள்ளிகள் தவிர்க்குமாறு அன்பில் மகேஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!