செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரக் கட்டிடம் திறப்பு விழா..

செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரக் கட்டிடம் திறக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக முன்னாள் மாணவர் சாகுல் கமீது ரூ. 2.50 லட்சம் செலவில் மாணவர்கள் வசதிகளுக்காக சுகாதார கட்டிடம் ( கழிப்பறை ) கட்டி கொடுத்துள்ளார். இந்த கட்டிட திறப்பு விழாவிற்குப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார். முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு, செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நன்கொடையாளர் சாகுல் கமீது தாயார் ஷகிலாபேகம் சுகாதார அறையைத் திறந்து வைத்தார்.

விழாவில் வழக்கறிஞர் சங்க தலைவர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார். நிகழ்வில் செய்யது அப்துல் ரகுமான், அக்பர், ஃபைசல், சாகுல்ஹமீது, ரெபேக்கா பானு, ரம்ஜான், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி விஜயலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர் இசக்கியம்மாள், கல்வியாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நன்கொடையாளர் உட்பட அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!