தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை முத்து லட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துராஜா அனைவரையும் வரவேற்றார்.



பள்ளி மேலாண்மை குழு தலைவி ஃபரீதா அப்துல் காதர், தென் பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் ஆகியோர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியின் அவசியம் பற்றியும், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் முதலியார்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.