கோவை மாவட்டம் காரமடை வட்டம் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன தினம் மற்றும் உலக நீர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது
காரமடை உள்வட்டும் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக வன தினம் மற்றும் உலக நீர் தினத்தை தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகள்
உற்சாகமாக கொண்டாடினர்.
சிறப்பாக நடைபெற்ற உலக வன தினம் மற்றும் உலக நீர் தினத்தின் நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், இயற்கை பாதுகாப்பு, நீர் வளத்தின் முக்கியத்துவம், மற்றும் மாணவர்களுக்கான வினாடி வினா போட்டிகள் நடைபெற்றன
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவர்கள், நீர் பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு தொடர்பான பயனுள்ள கருத்துக்களை மாணவர்களிடம் பகிர்ந்தனர்
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இயற்கை வளங்களை பேணி காப்பதின் முக்கியத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். விழாவின் நிறைவாக, மாணவர்கள் நீர் மற்றும் வனங்களை பாதுகாப்பை பற்றி தெரிந்து கொண்டனர் இது நிலையான சூழலுக்கு அவர்களின் ஒற்றுமையான அர்ப்பணிப்பை வலியுறுத்தியது நடைபெற்ற இன் நிகழ்ச்சியில் காரமடை அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் மற்றும்
உதவி தலைமை ஆசிரியர் முப்பிடாதி மற்றும் குமரகுரு வேளாண் கல்லூரி
வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் விழிப்புணர்வு மாணவர்கள் டேனியல் லிவிங்ஸ்டன், கவிகுமார்,பிரகாஷ் ,தேஜன் ,ரிஷிகுமார் கார்த்திக், காரமடை உள்வட்டம் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்

You must be logged in to post a comment.