மறந்து போன உணவு தானியங்களை வைத்து இயற்கை உணவுத்திருவிழா நடத்தி அசத்திய பள்ளி..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக இயற்கை உணவு திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.,வழக்கம் போல இந்த ஆண்டும் இந்த உணவு திருவிழா பள்ளி வகுப்பறை வளாகத்தில் நடைபெற்றது.,மாணவ மாணவிகள் ஆசிரியர்களின் உதவியோடு இயற்கை உணவுகளான கம்பு மற்றும் கேப்பை கூல், கேப்பை புட்டு, அரிசி மாவு புட்டு, கொழுக்கட்டை, தேன் மிட்டாய், முளைகட்டிய பாசி பயறு, சுண்டல் பயறு, பழங்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், பச்சை காய்கறிகளால் செய்யப்பட்ட உணவு வகைகள் என நூற்றுக்கணக்கான இயற்கை உணவுகளை காட்சி படுத்தியிருந்தனர்.,இவ்விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், வட்டார கல்வி அலுவலர் தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இயற்கை உணவுகளின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கு இயற்கை உணவுகளை வழங்கினர்.,இயற்கை உணவுகளின் மகத்துவத்தை துவக்கப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வண்ணம் மாணவ மாணவிகளே ஆசிரியர்களின் உதவியோடு இயற்கை உணவு வகைகளை தயாரித்து காட்சிபடுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!