புதிய கட்டிடம் கட்டக் கோாிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் 100 மாணவருக்கு மேல் கல்வி கற்கின்றனர். பள்ளியில் உள்ள இரு கட்டிடங்கள் மிகவும் மோசமாகவும்,இடிந்து விழும் நிலையில் உள்ளது.இக்கட்டில் தான் பள்ளி மாணவர்கள் அமர்ந்து படித்து வருகின்றனர்.

இதனால் கட்டிடம் இடிந்து விழுந்தால் மாணவர்களுக்கு உயிர் சேதம் ஏற்படும் நிலை உள்ளது. இதற்குப் பயந்து மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கின்றனர். வெயில் காலங்களில் அனல் காற்றும் மழை காலங்களில் மழை பெய்வதால் கல்வி கற்க மிகவும் சிரமப்படுகின்றனர். ஆகவே இதை கருத்தில் கொண்டு SDPI கட்சியின் திருவாடானை தெற்கு தொகுதி தலைவர் முஹம்மது ஹனிப் அவர்கள் CEO மற்றும் DEO அவர்களிடம் மனு கொடுத்து புதிய கட்டிடம் கட்டி தர வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!