நெல்லையில் ஒரே நாளில் பள்ளி மாணவ மாணவியர் ஒன்று சேர்ந்து ஐந்து லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கியது தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளம் பகுதியில் உள்ள பாலகிருஷ்ணா மெட்ரிக் சிபிஎஸ்இ, பள்ளிகள் மற்றும் பெண்கள் கல்லூரி மாணவ மாணவிகள் ஒன்று கூடி ஐந்து லட்சம் விதைப் பந்துகள் ஆர்வத்துடன் தயாரித்து புதிய சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் நடந்த விதைப் பந்து தயாரிப்பு பணியின் போது மண், தண்ணீர், மர விதை வகைகள் மாணவ மாணவியர் முன்னாள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. பயிலக தாளாளர் திவாகரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசினார். சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் கூடியிருந்த அனைவரையும் பசுமையை பாதுகாக்கும் வகையில் உறுதிமொழி ஏற்க செய்தார். இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் விதைப் பந்துகளை வீறு கொண்டு செய்ய ஆரம்பித்தனர்.



மாங்கொட்டை, பலாக் கொட்டை, வேப்பமுத்து, புளியங்கொட்டை, நாவல் விதை, சீதா பழ விதைகள், சப்போட்டா பழ விதை, கொடுக்காபுளி விதை, கொய்யாபழ விதைகள், கறிவேப்பிலை பழ விதைகள், கொன்றை விதை, பப்பாளி விதைகள், தேக்கு மர விதை, நெட்டிலிங்கம் மர விதை, பாதாம் கொட்டை ஆகிய விதைகளை எஸ்.ஏ.வி பாலகிருஷ்ணா பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மூன்றே நாட்களில் லட்சக் கணக்கான விதைகளை கொண்டு வந்து குவித்திருந்தனர். இந்த விதைகள் 50 நிமிடங்களில் மண் உருண்டைகளில் சேர்க்கப்பட்டன. பள்ளி குழந்தைகளுடன் சேர்ந்து திருமாறன், திவாகரன் சுடலையாண்டி பிள்ளை, பெஞ்சமின், சாந்தி, பிந்து விதைப் பந்துகள் செய்தனர். தன்னார்வத்துடன் விதைப்பந்து திருவிழாவில் கலந்து கொண்ட 5000 பேருக்கும் சாம்பவர் வடகரை ஹரி பிரியாணி நிறுவனம் சார்பில் “ஆல்- அத்தி-அரசு விருது” வழங்கப்பட்டது.
தயாரிக்கப்பட்ட விதைப் பந்துகள் சரியாக முளைத்து மரமாகின்ற இடங்களில் தூவப்படும் என செல்வகுமாரி திவாகரன் மற்றும் திவாகரன் தெரிவித்தனர். மேலும், பூமியின் பசுமையை பாதுகாத்திடும் விதைப் பந்து தயாரிப்பை ஆதரித்து செய்திகள் வெளியிட்டு வரும் கீழை நியூஸ் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் திருமாறன் நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் வரம் ஜவகர் கலந்து கொண்டார். பசுமை மேம்பாட்டு பணிகளுக்காக மாணவ மாணவியருக்கு கிரகாம் பெல் வாழ்த்து தெரிவித்தார். தயாரிக்கப்பட்ட விதைப் பந்துகள் மலைப்பகுதி, ஆற்றோரம், குளக்கரை, சாலை ஓரம் விதைக்கப்பட மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் போலீஸ் எஸ்.பி கார்த்திகேயன் வசம் ஒப்படைக்கப் படுகிறது. ஏற்கனவே 38 லட்சம் விதைப் பந்துகள் திருமாறன் முயற்சியில் தயாரிக்கப்பட்டு பூமியில் வீசப்பட்டுள்ள நிலையில், விதைப் பந்துகள் தயாரிப்பு ஒரே நாளில் 43 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.