சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாவிடுத்திக் கோட்டை அரசு பள்ளிக் கூட கான்கிரீட் மேல்கூரை இடிந்து விழுந்து இரு குழந்தைகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தேவகோட்டை அருகே மாவிடுதிக் கோட்டை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கூடம் புதிய மற்றும் பழைய கட்டிடடங்களில் இரண்டு பிரிவாக செயல்பட்டு வருகிறது. பழுதான கட்டிடத்தை மாற்றி புதிதாக கட்டிடம் கட்டித் தரக்கோரி கல்வி இலாகாவிற்கு பலமுறை எழுத்து மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் 1ஆம் தேதி வெள்ளிக் கிழமை மதியம் கம்ப்யூட்டர் அறையின் மேல் புறச்சுவர் உடைந்து பூச்சு நொறுங்கி விழுந்தது. பிரிக்கப்படாத புதிய கம்ப்யூட்டர் மேல் துகள்கள் இடிந்து விழுந்ததால் கம்ப்யூட்டர் நொறுங்கி விழுந்தன. கான்கிரீட் துகள்கள் ஒரு சில மாணவர்கள் ஆசிரியைகளின் மேல் விழுந்ததில் சிறு காயங்கள் ஏற்பட்டது. ஒரு கணினியும் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் ஏற்படாது தப்பினர். இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் பள்ளி முன்பாக கூடி முற்றுகையிட்டனர். பழைய கட்டிடத்தால் பள்ளிக் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. புதிதாக கட்டிடத்திற்கு ஏற்பாடு செய்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவோம் என்று தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.