மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில் அமைந்துள்ளது அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, 1924 ஆம் ஆண்டு கள்ளர் சீரமைப்புதுறையின் கீழ் துவங்கப்பட்டு பல்வேறு மாணவ மாணவிகளின் கல்வி கண் திறந்த இப்பள்ளியின் 100வது ஆண்டுவிழா இன்று நாட்டின் 78வது சுதந்திர தினத்துடன் இணைந்து கொண்டாடப்பட்டது.,இந்த அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழாவில் முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சிக்கான முன்னெடுப்பின் முதற்கட்டமாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவ மாணவிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கி பாராட்டினர்.,தொடர்ந்து பள்ளியில் இந்த ஆண்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கி ஊக்கப்படுத்தி அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.,

You must be logged in to post a comment.