தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. மேலாண்மை குழு தலைவி பரிதா அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார், ஊராட்சி மன்ற தலைவி முகைதீன் பிவி அசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியை ஹெப்சிபா வரவேற்றார். ஆசிரியர் முத்துராஜா நன்றி கூறினார்.
மேலாண்மைக் குழு கூட்டத்தில், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது, நம் ஸ்கூல் நம் ஊரு பள்ளி திட்டத்தைப் பற்றி விளக்குதல், உயர் கல்வி வழிகாட்டி முகாம் நடத்துதல், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்துதல், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், போதைப் பொருள் இல்லாத பள்ளிக் கூடம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
மேலும், பள்ளி மேலாண்மை குழு சார்பில் மரக் கன்று நடப்பட்டது. நிகழ்ச்சியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராம லட்சுமி, விஜயலட்சுமி, அருணா, முகமது காசிம், மற்றும் கல்வி குழு உறுப்பினர் கட்டி அப்துல் காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்