உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழா..

இந்தியா முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கி மேற்படிப்பு படிக்க இயலா நிலையில் உள்ள மாணவர்களுக்கு உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகை பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா வழங்கி வருகிறது.

இராமநாதபுரம் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் உயர் கல்விக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரத்தில் நடந்தது. இதில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர்  R.நியாஸ்கான் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது இப்ராகிம் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் முகமது நஸ்ருதீன், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், இராமநாதபுரம் அரசு மருத்துவமனை எலும்பு முறிவு டாக்டர் பெரோஸ்கான், பழனிவலசை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், எஸ் எஸ் கே குழுமம் சைபுல்லாஹ், எஸ்டிபிஐ இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் அப்துல் ாப், ஜன் சேவா சங்கத் தலைவர் நஜ்முதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் 35 மாணவர்களுக்கு ரூ. மூன்றரை லட்சம் லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபைர் ஆபிதீன் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!