ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணிகள்: தொழில் துறை ஆணையர் ஆய்வு..

இராமநாதபுரம், செப்.22- இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்டுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். தொழில்கள் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆணையரும்,  மாவட்ட கணிப்பாய்வு அலுவலருமான அர்ச்சனா பட்நாயக் தலைமை வகித்தார். வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயத்திற்கு வாடகைக்கு வழங்கப்படும் டிராக்டர், உபகரணங்கள், அதன் மூலம் பயனடைந்த விவசாயிகள், கலைஞரின் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தால் பயனடைந்த விவசாயிகள், உழவன் செயலி பயன்பாடு குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஊரகவளர்ச்சி துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட பணிகள், முதல்வரின் கிராம சாலைகள் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார். கிராமப்புறங்களில் குடிநீர் வழங்கல் முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு பருவமழையையொட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பள்ளிகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றவும், மராமத்து பணிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டத்தின் ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர் கல்வி உறுதி திட்ட செயல்பாடு குறித்து கேட்டறிந்தார் . மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு , உதவி  ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!