தொடரும் அலைபேசி வழி ஏமாற்று வேலை..

தொடர்ந்து அலைபேசி வழியாக வங்கி எண்களை பெற்று ஏமாற்றி வந்த கூட்டம் சிறிது காலம் அமைதியாக இருந்தது போல் காட்சியளித்தது.  ஆனால் மீண்டும் ஏமாற்று வேலையை தொடங்கியுள்ளார்கள்.

இன்று (13/05/2019) மாலை நமது கீழை நியூஸ் நிருபருக்கு +919943735608 என்ற எண்ணில் இருந்து RBI வங்கியில் இருந்து அழைப்பதாக கூறியுள்ளார்கள். பின்னர் உங்களுக்கு CREDIT CARD தருகிறோம், வேறு வங்கி CARD விபரம் இருந்தால் தாருங்கள் அந்த விபரங்களை வைத்து புதிதாக கூடுதல் தொகையுடன் புதிய கார்டு தருவதாக கூறியுள்ளார்கள்.

பின்னர் நம் நிருபர் போலியான அழைப்பு என்பதை அறிந்து உங்களுடைய மேலாளர் யார்??, எப்படி விபரம் கிடைத்தது?,, சைபர் கிரைமில் புகார் அளிப்போம் என கூறியதுடன், உங்களுக்கு மெசேஜ் அனுப்புகிறோம் என கூறி அழைப்பை துண்டித்துள்ளார்கள். இது போன்ற ஏமாற்று பேர்வழிகளிடம் தங்கள் வங்கி மற்றும் பிற விபரங்களை கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!