பாரத வங்கியா?? மக்களுக்கு பாரத்தை தரும் வங்கியா??

கீழக்கரை பாரத வங்கி கிழக்கு தெருவில் கல வருடங்களாகசெயல்பட்டு வருகிறது. கீழக்கரையில் பல வங்கிகள் செயல்பாட்டில் இருந்தாலும், பழமையான வங்கி என்ற அடிப்படையிலும், கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்து இருந்தனர்.

ஆனால் சமீப காலமாக அவர்களுடைய சேவையும், அராஜக போக்கும் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதுபற்றி இவ்வங்கியில் கணக்கு வைத்துள்ள பீர்னாவெட்டையை சேர்ந்த கா. சீ. காக்கா கூறுகையில் ” கீழக்கரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தற்போதய கிளை மேலாளர் மாணிக்கம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஆனால் அவருடைய செயல்பாடுகளும் திருப்திகரமாய் இல்லை. மேலும் வங்கியின் செயல்பாடுகளின் நிலையையும் சரிவர இவருக்கு தெரிவதில்லை. அதேபோல் அவருக்கு இவருக்கு துணையாய் இருக்கும் வசந்த் என்பவர் வங்கிக்கு வரும் நபர்களிடம் எடுத்தெறிந்து பேசுகிறார். அவரிடம் “ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் ” என கேட்டால், ஒழுங்கான பதில் தராமல் வங்கி வாசலிலே அதிக நேரத்தை செலவு செய்கிறார்.

கடந்த காலங்களில் குறைந்த அளவு வங்கிகள் இருந்த போது உள்ள வரவேற்பும் இப்பொழுது இல்லை, அதற்கு கஆரணம் சேவை செய்யும் நல் உள்ளம் கொண்ட அதிகாரிகள் இல்லை என்பதே உண்மை என்றார் .

மேலும் அருகே இருந்த இடிமின்னல் ஹாஜா கூறுகையில் ” ஆம் பொதுமக்கள் அலைகழிக்கப்படுவது உண்மை.அதிலும் துணை மேனேஜர் ஊர் மக்களை உதாசீனபடுத்தியும், கேவலமாகவும் பேசியும் வருகிறார், இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு நிரந்தர தீர்வாக அதில் கணக்கு வைத்திருப்பவர்கள் SBI வங்கியை புறக்கணிக்க வேண்டும். மேலும் வங்கியும் இங்கிருந்து முக்கு ரோடுக்கு இடம் மாற்றம் செய்ய இருப்பதால், வங்கியில் கணக்கை துவக்கி வீணாக அலையாமல், நம்மை அவமரியாதை செய்வோரை துச்சமென நினைத்து தூக்கி எறிவோம் என்றார்.

பாரத வங்கிக்கு மக்களின் குறை கேட்குமா??

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!