உலக சிவில் பாதுகாப்பு தினம் (World Civil Defence Day) இன்று (01-03-2017) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. உலக சிவில் பாதுகாப்பு தினம் 1990ம் ஆண்டு சர்வதேச சிவில் பாதுகப்பு அமைப்பு (International Civil Defence Organisation) இத்தினத்தை அறிவித்தது.
இந்த வருடம் இத்தினத்தை சவுதி அரசாங்கமும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வண்ணம் குறுஞ்செய்திகள் மற்றும் தீ அணைப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகள் பல இடங்களில் நடத்தியது.

நேற்று இத்தினத்தை முன்னிட்டு சவுதியின் முன்னனி நிறுவனமான அல்மராய் கம்பெனி மற்றும் ரியாதின் மிகப் பெரிய வணிக வளாகமான அல் நகீல் ஆகிய பகுதிகளில் அநநிறுவன ஊழியர்கள் மத்தியில் நேரடி ஒத்திகை நடத்தப்பட்டு, அபாயகரமான சம்பவங்கள் ஏற்படும் பொழுது எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்ற செயல் முறைகள் செய்து காட்டப்பட்டது.

இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சவுதி போன்ற நாடுகள் இது போன்ற வழிப்புணர்வு விசயங்களில் எப்பொழுதும் முன்னோடியாக இருப்பது குறிப்பிடதக்கது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









