தஞ்சாவூர் ராஜப்பா நகர் 1ஆம் தெரு அலுவலகத்தில் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கௌரவ தலைவர் செல்வம் தலைமை தாங்கினார், தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்பு உரை ஆற்றினார் .துணைத் தலைவர்கள் கண்ணாடி குமார், லயன் ஜெயபால் ,ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் ,ராஜசேகரன், முரளி, சுப்பிரமணியன், சுகுமார், நாகராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .மாவட்ட பொருளாளர் பார்த்தசாரதி நன்றியுரை கூறினார் .கூட்டத்தில் சத்தியா அரங்கத்திற்கு வருபவர்கள் இரண்டு ,நான்கு சக்கர வாகனங்களை அதற்கு உரிய அதற்குரிய இடத்தில் நிறுத்த வேண்டும் ,சத்யா விளையாட்டரங்கில் உள்ளே ஆயிரம் மரக்கன்றுகள் இந்த மாதத்தில் வைப்பது எனவும், அது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகளை சந்திப்பது, முன் நுழைவு வாயிலில் அவசர ஏற்பாடுகளாக முதலுதவி பெட்டி வைப்பது ,முன் நுழைவுவாயிலில் நடை பயிற்சி வருவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைப்பது, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள 8 கிலோ மீட்டர் நடை பயிற்சியில் அனைத்து நடைபயிற்சியாளரும் மாதம் ஒருமுறை கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும், இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சிசிடிவி கேமரா வைப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திப்பது, நடைபயிற்சியாளர் சங்கத்தின் பெயர் பலகை வைத்து தினமும் ஒரு திருக்குறள் எழுதுவது, என மேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

You must be logged in to post a comment.