கீழக்கரை சட்டப் போராளிகளின் சார்பாக மக்கள் நல பாதுகாப்பு கழகம் மற்றும் இஸ்லாமிய கல்விச் சங்கம் இணைந்து இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் நம் நகரின் ஐந்து பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு மனு கொடுக்கப்பட்டது.

மனுக்கள் விபரங்கள் கீழே வருமாறு :-
மனு : 1கீழக்கரை நகருக்கு மாவட்ட ஆட்சியரை சாலை சம்பந்தமாக ஆய்வு செய்ய அழைத்து, ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோருதல் சம்பந்தமாக
மனு : 2கீழக்கரை இராமநாதபுரம் சாலையில், பெட்ரோல் பங்க் முன்னதாக விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டு இருக்கும் தடுப்பு வேலியை அகற்றக் கோருதல் சம்பந்தமாக
மனு : 3கீழக்கரை புதிய பேருந்து நிலையத்திற்குள் வராமல் செல்லும் அரசு பேருந்துகளை முறையாக வர நடவடிக்கை எடுப்பது குறித்து
மனு : 4கீழக்கரை நகராட்சி பெயரில் வாகனங்களை நிறுத்தி சட்ட விரோத வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்கள் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக
மனு : 5கீழக்கரை கடற்கரை பெட்ரோல் பங்க் வரை பேருந்துகள் வராததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளதை சுட்டிக் காட்டி உடனடியாக பேருந்துகளை வழக்கம் போல் கடற்கரை வரை இயக்க முயற்சிப்பது குறித்து மனுக்கள் கொடுக்கப்பட்டது
மாவட்ட டாஸ்மாக் மேலாளரை சந்தித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மதித்து உடனடியாக கீழக்கரை இராமநாதபுரம் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் கடையை அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அதிகாரி திரு ஜி.தங்கவேலு அவர்களை சந்தித்து கீழக்கரை பகுதியில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான சலுகைகள் குறித்த விழிப்புணர்வை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இராமநாதபுரம் கோட்டபொறியாளர் அலுவலகத்திற்கு சென்று சாலை சம்பந்தமான ஆறு அம்ச கோரிக்கை மனுவினை நெடுஞ்சாலை துறை செயற் பொறியாளர் முருகானந்தத்தை நேரடியாக சந்தித்து வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
ஆறு அம்ச கோரிக்கைகளின் விபரங்கள் கீழே வருமாறு:-
1. பழைய சாலைகளை அகற்றாமல் பணி நடந்துள்ளது. ஆகவே ஒப்பந்தப்படி முறையான வேலையை செய்யாத ஒப்பந்ததாரருக்கு ஒப்பந்த தொகையை வழங்கக் கூடாது.
2.. ஒப்பந்தப்படி சாலை அமைக்காததால், சாலை ஒன்றரை அடி உயர்ந்து சாலையின் இரு மருங்கிலும் அபாய பள்ளம் காணப்படுகிறது. அவற்றை முறையாக சரளை கற்களின் மூலம் நிரப்பி சீர்படுத்த வேண்டும்.
3. சாலையின் இரு மருங்கிலும் உள்ள அபாய பள்ளத்தின் எதிரொலியாக அரசு பேருந்துகள் நகரின் கடற்கரை பகுதி வரை இயக்கப்படவில்லை. உடனடியாக சாலையை சீர் செய்து நகருக்குள் கடற்கரை வரை பேருந்துகளை இயக்க வேண்டும்.
4. தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கப்படாததால், நகருக்குள் அதி வேகத்தில் இயக்கப்படும் வாகனங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே தேவையான இடங்களில் வேகத் தடைகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
5. முன்னறிவிப்பின்று அமைக்கப்பட்டுள்ள தேவையில்லாத பல புதிய வேகத்தடைகளில் ஒளிரும் பெயிண்ட் பூசப்படவில்லை. இதனால் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆகவே அமைக்கப்படும் அனைத்து வேகத் தடைகளிலும் உடனடியாக ஒளிரும் பெயிண்ட் பூசப்பட்ட வேண்டும்.
6. சாலை விதிகளின் படி வாகன ஓட்டிகளின் கண்ணுக்கு படும் படியாக வேகத்தடை இருப்பது குறித்த எச்சரிக்கை பலகை இல்லை. உடனடியாக வேகத் தடை குறித்த எச்சரிக்கை பலகையை வைக்க வேண்டும்.
6. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தினமும் நான்கு பேர் வீதம் அபாய பள்ளத்தில் விழுந்து, காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உடனடியாக தகுந்த இழப்பீட்டுத் தொகையினை தாமதமின்றி வழங்க வேண்டும்.
இந்த நிகழ்வுகளில் சட்டப் போராளிகள் முஹைதீன் இபுறாகீம் காக்கா, அஹமது அஸ்லம், ஜாபிர் சுலைமான், நூருல் ஜமான், சாலிஹ் ஹுசைன் மஹ்மூது ரிபான் கலந்து கொண்டனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










Masha allah.தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thermoplastic paints should be considered for better reflection in the road markings
Good idea brother…