கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பாக “வலைதளம் மென்பொருட்களை கட்டுப்படுத்துதல்”; பற்றிய இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமையிலும்இ கல்லூரி முதல்வர் முனைவர். அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை துணைப் பேராசிரியர். சேக் அராபத் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சென்னை, பான்டெக் பிரைவேட் லிமிடேட் பயிற்சியாளர்கள் பிச்சைமுத்து மற்றும் கைலாஸ் ஆகியோர் கலந்துகொண்டு இன்றைய காலகட்டத்தில் வலைதள மென்பொருட்களை பயன்படுத்தி மின்சாதன பொருட்கள் அனைத்தையும் இருந்த இடத்திலேயே அதன் செயல்பாடுகளை கட்டுபடுத்துவதற்கு பல வசதிகள் உள்ளன. நவீன தானியங்கி இயந்திரங்களை கட்டுபடுத்துவதற்கு நுண் கட்டுபடுத்திகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பலவித விளக்கப்படங்களுடன் விரிவாக விளக்கி கூறினார்கள்.

மின்னணு மற்றும் தொடர்பியல் துறை 3மற்றும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கு 60 திட்ட வரைவு மாதிரிகள் (Project) பயிற்சியாளர்களால் செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களாகிய நீங்கள் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நாளைய வெற்றியாளராக விளங்க வேண்டுமென வாழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் பீர்ஒலி வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை துணை பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!