முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சிலுவை இயக்க துவக்க விழா..

முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14.08.18 அன்று கல்லூரி கருத்தரங்கு மண்டபத்தில் மதியம் 2 மணியளவில் செஞ்சிலுவை இயக்க துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இவ்விழாவில் 105 மாணவிகளும் கல்லூரி பேராசிரியர்களும் பங்குபெற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் A.R.நாதிரா வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வள்ளிவிநாயகம் மாவட்ட செஞ்சிலுவை இயக்க ஒருங்கிணைப்பாளர் YRCயின் உண்மையான பொருள் உடல்நிலை, சேவை, நட்பு என்று எடுத்துரைத்தார். பின்னர் ராக்லாண்ட் மதுரம் மாவட்ட செஞ்சிலுவை இயக்க செயலாளரும் முக்கிய குறிப்பு முகவரியினை தொகுத்து வழங்கினார். S விஜயகோமதி தபால் துறை உதவி கண்காணிப்பாளர்   சிறப்புறையாற்றி YRCயின்சேவை முதலில் வீட்டில் இருந்து துவக்கப்படும் என்று கூறி  செஞ்சிலுவை இயக்க மென்நெகிழியை ஒப்படைத்தார்.

அதை தொடர்ந்து ஹரன் செஞ்சிலுவை இயக்க தலைவர் செஞ்சிலுவை இயக்க தந்தை புகைப்படத்தை ஒப்படைத்தார். இறுதியாக  P.பிரியங்கா தொழில்நுட்பவியல் தலைவர் நன்றி உரை கூற கூட்டம் இனிதே முடிவடைந்தது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!