இராமநாதபுரம், அக்.14 – ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் அறக்கட்டளை பொன்விழா கொண்டாட்டம் இன்று நடந்தது. அறக்கட்டளை தலைவர் முஹமது யூசுப் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஹமீது இப்ராஹிம் பேசினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரைக்கு தேசத்தின் பெருமை விருது வழங்கப்பட்டது. எஸ்பி (பணி நிறைவு) கலியமூர்த்தி தன்னம்பிக்கை உரையாற்றினார். அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முஹமது, செயலர் சர்மிளா, முன்னாள் மாணவர்கள் ராஜ் சுப்ரமணியம், லோக சண்முகம், பரமேஸ்வரன், அருள்ராஜ் குமார், புருஷோத்தமன், மோகன், ரிஸ்வான் ஆகியோர் பேசினர். அறக்கட்டளை தலைவர் முஹமது யூசுப், நிர்வாக இயக்குநர் ஹமீது இப்ராஹிம் ஆகியோருக்கு முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள், முதல்வர் அலாவுதீன் வெள்ளி செங்கோல், முதல்வர் சேக் தாவூது வெள்ளி வாள் வழங்கினர். ரவூஃபா, பிரதிமா குப்பாலா (பெண் தொழிலதிபர்), ஷகிலா பாரூக் (பெண்களின் பெருமை) பாத்திமா ரஃபீக், கதீஜா ரகுமான் (பரோபகாரர்), சீனிவாச ராஜா (தொழிலதிபர்), ஓடந்துறை சண்முகம் (வாழ்நாள் சாதனையாளர்), ரைஹானா பேகம் (அறிவியலில் சிறந்தோர்) என விருது வழங்கப்பட்டது. பொன்விழா ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி யோருக்கு பணியாளர் சேவை விருது வழங்கப்பட்டது. முஹமது சதக் கலை, அறிவியல் கல்லூரி இயக்குனர் அப்துல் ஹலீம் நன்றி கூறினார்.


You must be logged in to post a comment.