கிராமங்கள் தோறும் தி மு க நடத்தும் கிராமசபை கூட்டம் ,தி மு க வின் தேர்தல் ஸ்டன்ட் என தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் சரத்குமார் பேசினார்.
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பேசுகையில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போகிறோம் ,எங்களது வாக்குவங்கியை என்ன என்று தெரிந்துகொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ,, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஜெயலலிதா இருக்கும்வரை பயணித்திருக்கிறோம் எங்களுடைய வாக்கு வங்கி என்ன என்று தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது,, கூட்டணியில் இருந்தால் தெரிந்துகொள்ள முடியாது ஆகவே தனித்து போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது. தமிழகத்தின் முதல்வர் ஆவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது பாராளுமன்ற தேர்தலில் எப்படிப்பட்ட முடிவு எடுக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்படும் நிலையில் இருக்கிறோம், 20 தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம்.
வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட களத்தை உருவாக்குகிறார் ,தூத்துக்குடியில் போட்டியிட முடிவெடுத்துள்ளதால் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் களப்பணி ஆற்றி கொண்டிருக்கிறார், தி மு க நடத்தும் கிராமசபை கிராமசபை கூட்டங்கள் தேர்தலை கணக்கில் வைத்து செய்யும் செயல் இதற்கு முன்பு கிராமங்களுக்கு சென்று கிராமசபை கூட்டம் என்ற பெயரில் இவர்கள் மக்களை சந்திக்கவில்லை ,இப்போது செய்வது தேர்தல் ஸ்டண்ட்.
வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்பு இல்லை, தென்காசி ரோட்டரி கூட்டத்திற்கு செல்வதற்காக விமானத்தில் தூத்துக்குடி வந்தேன் , தூத்துக்குடியில் இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று மாவட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதன் பேரில் தூத்துக்குடி வந்துள்ளேன் ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக இடமாற்றம் செய்ய வேண்டும் முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஸ்டாலின் அதை கொச்சைப்படுத்தி பேசுகிறார் என கூறினார் ,
பேட்டியின் போது துணைப் பொதுச் செயலாளர் சுந்தர், மாநில இளைஞர் அணி குரூஸ் திவாகர், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலளார் வில்சன், தெற்கு மாவட்ட செயலளார் தயாளன், மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் சந்திரா, ஜெயந்திகுமார், நெல்லை பொன்னுதாய், ஜெயலெட்சுமி, கன்னியாகுமரி ஜோனியா, சோபிதா ராணி உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி


You must be logged in to post a comment.