கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்தம் அளித்த ஒப்பந்ததாரர் முறையாக சம்பளம் வழங்காமலும் அவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட இஎஸ்ஐ இ பி எப் போன்ற தொகைகளை முறையாக செலுத்தாததாலும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கடந்த 18ஆம் தேதி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமையில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் அனைவரையும் அழைத்து அமைதி மற்றும் சமூக பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது அந்த சமூக பேச்சுவார்த்தையில் டிசம்பர் 26 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரர் வழங்க வேண்டிய இ எஸ் ஐ இ பி எஃப் தொகைகளை செலுத்தி விடுவதாக வட்டாட்சியர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது இந்நிலையில் 26 ஆம் தேதி கடந்து தற்போது வரை தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரர் அரசு அதிகாரிகளின் உத்தரவையும் மதிக்காமல் தற்போது வரை இ எஸ் ஐ இ பி எஃப் போன்றவைகளையும் தொழிலாளர்களின் பிடித்து வைக்கப்பட்ட சம்பளத் தொகையையும் வழங்காததை கண்டித்தும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் மேற்படி ஒப்பந்ததாரரிடம் இருந்து தொழிலாளர்களுக்கு வரவேண்டிய அனைத்து தொகைகளையும் பெற்று தர வேண்டி தற்போது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சி ஐ டி யு ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

You must be logged in to post a comment.